நினைவு நல்லது வேண்டும்

தந்தையில்லா வீடும் தலைவனில்லா நாடும் ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தனக்குப்பின் அவன் விட்டுச் செல்வதை வைத்தே முடிவு செய்ய வேண்டும் என்கிறது ஒரு குறள். பிள்ளைகளை வைத்துப் பெற்றோரை முடிவு செய்யலாம். பின்பற்றுவர்களை வைத்துத் தலைவனை முடிவு செய்யலாம்.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

புத்தம் புதிய தொடர் இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு ‘சட்’டென்று தோன்றுவது என்ன? இது ஊக்கம் கொடுக்கும் பொன்மொழி என்பீர்களா? கவித்துவமான வெளிப்பாடு என்பீர்களா? கேட்க நன்றாயிருக்கிறது – காரியத்திற்கு ஆகுமா என்று எண்ணுவீர்களா? “இது உண்மைதான்” என்று மனதுக்குள் சொல்வீர்களா?

உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை

விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு.

நேர்காணல்

மலேசிய கூட்டமைப்புப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ.மு. சரவணன் நேர்காணல் (நிர்வாகி – இலக்கியவாதி – அரசியல் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் டத்தோ. மு.சரவணன். பிஞ்சுப்பருவத்தில் பேச்சாளராய் மலர்ந்து, கல்லூரிப் பருவத்தில் அரசியலில் நுழைந்து, நாற்பது வயதில் மலேசியாவின் துணையமைச்சராய் பொறுப்பேற்றிருக்கிறார்.

என் பாணி தனி பாணி

அவன் இளைஞன். தன்னுடைய விசித்திரமான, வினோதமான, விந்தையான செயல்பாடுகளின் மூலம் பிறரை முகம் சுளிக்க வைக்கும் மனிதன். ஒருமுறை அவனின் அந்த செய்கைகள் குறித்து அவனிடமே கேள்வி எழுப்பப்பட்ட போது அவன் சொன்ன விளக்கம் உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சியடையத் தான் வைத்தது.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை: 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். 2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் -6

புரோக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் 1879 வரை அதிக அளவில் மெழுகு வர்த்திகளைத் தயாரித்தது. விற்பனையும் அபாரம். எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடித்த பிறகு மெழுகுவர்த்தி விற்பனை குறைந்து உருகிக்கொண்டே வந்தது. பண நெருக்கடி ஏற்பட்டது. போதாக் குறைக்கு ஒரு பணியாளர் மதிய உணவுக்குப் போகையில் இயந்திரத்தை நிறுத்த மறந்ததில், தொழிற்சாலை முழுக்க ஒரு

கான்ஃபிடன்ஸ் கார்னர் -5

டிஸ்லெக்ஸியா நோய் காரணமாய் அந்த பெண்ணை பதினாறு வயது வரை பள்ளிக்கு அனுப்ப வில்லை. எழுதப் படிக்கத் தெரியாமலேயே வாழ்ந்தார். ஆனால், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற கனவு இருந்தது. சின்னச்சின்ன வேலைகள் பார்த்துப் பணம் ஈட்டினார். பள்ளிக் கல்விக்கு இணையாக தேர்ச்சியை மிக அதிக மதிப்பெண்களுடன் பெற்றார். ஆனாலும் அவரது

கான்ஃபிடன்ஸ் கார்னர் -4

தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது. “இது வேண்டாத வேலை! வீணான முயற்சி! விட்டுவிடு! உனக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டுமென்றால், என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!” என்று அழைப்பு விடுத்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் -3

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. “நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், “அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”. அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,