கான்பிடன்ஸ் கார்னர்-1
விவசாயம் செய்து கொண்டிருந்த அந்த மனிதரின் நண்பர்கள் பலரும் வைரம் விற்பனை செய்து பெரும் செல்வம் குவித்தனர். இவரும் தன்னுடைய வயலை விற்றுவிட்டு வைர வியாபாரம் தேடிப்போனார். வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்தினார். இவரது வயலை வாங்கியவர், ஒரு நாள் வயலை உழுதபோது கிடைத்த கல்லை ஆய்வு செய்தார். அந்த வயலே வைரச் சுரங்கம்
இப்படியெல்லாம் இருங்கள்!
உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள். இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள். நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.
நினைவு நல்லது வேண்டும்
உள்ளே, வெளியே1 உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் யாரிடமோ கேட்ட ஒரு கருத்து அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டது. அதன்பின் பல மேடைகளில் அதைச் சொல்ல நேர்ந்திருக்கிறது எனக்கு. நீங்கள் கூட இதை படித்தோ அல்லது யாரிடமோ கேட்டோ இருக்க முடியும்.
அட்டைப்படக் கட்டுரை
உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள் -மரபின் மைந்தன் முத்தையா ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.
உங்கள் நிறுவனம் சிறிதா பெரிதா?
– ரகு உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக வாகை சூடிய கிரிக்கெட் அணிக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் என்ன வித்தியாசம்?” இந்தக் கேள்விக்கு பதில், “எல்லாவற்றிலுமே வித்தியாசம்” என்பதாகத்தான் இருக்கும். பள்ளி அளவிலான கிரிக்கெட் அணி என்று வரும்போது, அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் அசகாய சூரர்கள் என்று சொல்ல முடியாது.
சென்னை ஐடியா ப்ளஸ் சேர்மன்
நேர்காணல் 1. உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன். கல்லூரி படிப்பிற்கு பிறகு, புதிராக இருந்த வாழ்க்கையை எனக்கு புரிய வைத்தது புத்தகங்கள்தான். புத்தகங்கள் எனக்குள் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அந்த தருணத்தில்தான் என் வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் உணர்ந்தேன். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடும் எதிர்காலம் பற்றிய
நமது பார்வை
வன்முறை இல்லாத வல்லரசு வல்லரசுக் கனவுகள் ஒருபுறம் – வன்முறை நிகழ்வுகள் மறுபுறம். ஆதாயத் தொழில்கள் ஒருபுறம் – ஆட்குறைப்பும் நிதிநெருக்கடியும் மறுபுறம். இந்தியனின் வல்லரசுக் கனவின் வேர்களை அசைக்கும் விதமாய் இந்த முரண்பாடுகள் முள்ளாய் உறுத்துகின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
தான் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பெண்ணுக்கு. உணவகம் ஒன்றில் ஒரு தோழிக்காகக் காத்திருந்தார். மற்றவர்கள் பார்வையில் படுவதில் அவளுக்கு மிகுந்த கூச்சம். நகம் கடித்து, நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.. தூரத்து மேசையில் அமர்ந்திருந்த ஒருவர் பார்த்துக் கொண்டேயிருந்தார். பணிப்பெண்ணை அழைத்து ஏதோ சொன்னார். அதற்குள் அந்தப் பெண்ணின் தோழியும் வந்து சேர்ந்தார். சாப்பிட்டு
கான்பிடன்ஸ் கார்னர் – 5
அந்தப் பெண்ணுக்கு நடுத்தர வயது. வாழ்வில் எதிலுமே பிடிப்பின்றி இருந்தார். வீடு முழுவதும் இருளடைந்து – தூசுபடிந்து கிடந்தது. அந்தப் பெண்ணின் ஒரே பற்றுக்கோடு, பக்கத்து வீட்டுக் குழந்தை. ஒருநாள் அந்தக் குழந்தை அழகிய ரோஜா ஒன்றைக் கொண்டு வந்து தந்தது. மிகவும் மகிழ்ந்த அந்தப் பெண், ரோஜாவை வைக்க பூ ஜாடியை எடுத்தார். அதன் … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 4
பொம்மைத் தொலைபேசியுடன் குழந்தை தன் கற்பனை சிநேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தது. மடியில் இருந்த பொம்மையை சுட்டிக்காட்டி, “இவளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடங்கவே மாட்டேன் என்கிறாள். சமாளிக்கவே முடியவில்லை”. இந்தக் கற்பனை உரையாடலைக் கேட்ட குழந்தையின் தாய்க்கு அதிர்ச்சி. தன் சிநேகிதிகளுடன் பேசுவது குழந்தையின் மனதில் இப்படியொரு