கேஸ் ஸ்டடி

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், நீதிபதியிடம் கருத்தை முறையிடும்போது ‘மை லார்டு’ என்று அழைக்கும் பழைய பழக்கம் ஒன்று உண்டு. இப்படி அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ‘யுவர் ஹானர்’ என்று அழைத்தால் போதும் என்று 2006 ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அரசு கெஸட்டில் அறிவிக்கப்பட்டது.

இதழ் வழியே எஸ்.எம்.எஸ்

ஒவ்வொரு முறையும் விழும் அலைகள் மீண்டும் முழுவீச்சோடு எழத் தவறுவதில்லை. விழுந்து எழுவதே வெற்றிசூத்திரம். உங்கள் தோல்விகளை பிறரின் வெற்றிகளை வைத்து வரையறுக்காதீர்கள்.

நமது பார்வை

சென்னையில் இன்னொரு சமுத்திரம் நூலகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராமம் தோறும் நூலகங்கள், பேருந்து நிலையம் தோறும் புத்தக விற்பனை மையங்கள் என்று, தமிழக அரசு, வாசிப்பின் தரத்தையும் பழக்கத்தையும் மேம்படுத்த எத்தனையோ திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றுக்கு

கான்பிடன்ஸ் கார்னர் – 6

ஒரு மனிதர் எதற்கெடுத்தாலும் எல்லோரிடமும் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். ஒலிகளை ஆராயும் விஞ்ஞானி ஒருவர், ஒரு முறை அவரது பதட்டங்களையும் போடுகிற சத்தத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். தன் மனைவியிடம் காபி சூடாக இல்லை என்பதற்காக அவர் அப்போது சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

“நல்லவர்கள், தீயவர்கள் இருவருமே காக்கப்பட வேண்டியவர்கள் என்கிறீர்களே சுவாமி! இது எதனால்?” என்று சீடர் குருவிடம் கேட்டார். குரு எதுவும் பேசாமல், கையிலிருந்த நோட்டில் ‘உ’ என்னும் எழுத்தைத் தலைகீழாக எழுதினார். சீடரின் நோட்டைக்காட்டி, “இது என்ன?” என்று கேட்டார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

பகவான் பிரபுபாதாவிடம், அணுகுண்டைவிடவும் சக்திமிக்க ஆயுதம் எதுவென்று கேட்டபோது, அவர் சொன்ன பதில், “ஆலயமணிதான் அணுகுண்டைவிட சக்தி மிக்கது” என்பதாகும். அணுகுண்டு வெடித்தால் சுற்றிலும் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று பலவற்றை அழிக்கிறது. ஆனால், பிரார்த்தனைப்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார். செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின. வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு. அதே தண்ணீர். அதே உரம்.

நமக்குள்ளே

நம் ஆசிரியரின் அட்டைப்படக் கட்டுரை சாதனை மந்திரங்கள் – 6 என்ற தலைப்பில் உருவான கட்டுரையில் “சவாலா? சமாளிக்காதே” என்ற துணைத் தலைப்பில் “சவால்களை சமாளிப்பது சரக்கில்லாதவர்களின் வேலை…. சவால்களை ஜமாய்ப்பதுதான் சாதனையாளர்களின் லீலை” – இதுதான் சரி.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

தோல்வியை தோல்வியடைய வைப்பது எப்படி? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒவ்வொருவருக்கும் இந்தியன் என்ற உணர்வு 100% இருக்க வேண்டும். தினமும் 12 மணி நேரம் உழைத்திட வேண்டும்.