வெற்றித்திசை

தகதகத்தது தஞ்சை! தஞ்சாவூர் மஹாராஜா சில்க் ஹவுஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களும் நமது நம்பிக்கை மாத இதழும் இணைந்து நடத்திய ‘இருபெரும்விழா’வில் தஞ்சை நகரமே திரண்டு வந்தது. மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  மாண்புமிகு மாநில வணிகவரித்துறை அமைச்சர் திரு எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

வாடகைக்குப் பாடநூல்

இது ஒரு புது முயற்சி பென்சில் சீவிக் கொண்டிருந்தேன் மொர மொரவென மரங்கள் எங்கோ சரிய – கல்யாண்ஜி இயற்கைக்கு எதிராக தன்னால் நேரும் தவிர்க்கவியலாத இன்னல் குறித்து ஒரு கவிஞனின் மனப்பதிவு இந்தக் கவிதை.

திரு. இளங்கோவன் நேர்காணல்

உங்களது இளமைப் பருவம் பற்றி….. எனது தந்தையார் பெயர் திரு. குழந்தைசாமி. தாயார் பெயர் சுப்புலட்சுமி. நான் 07.10.1958-ல் பிறந்தேன். எனது கல்வி அரசு ஆரம்பப் பள்ளியில் துவங்கியது. வெள்ளக்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தது. அங்கு இரண்டாம் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பிறகு 1975ல் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். 180 மாணவர்களில் 172வது இடத்தை

அந்தக்காலம் இந்த மாதம்

ஜூலை 15 1985 ஆல்டஸ் நிறுவனத்தின் பேஜ்மேக்கர் என்ற மென்பொருள் இன்றுதான் உலகுக்கு அறிமுகமானது. செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் பிரசுரிப்பதற்கு ஏற்ற வகையில் கண்டறியப்பட்ட உலகின் முதல் மென்பொருள் இது!

நமது பார்வை

இது பரவுக! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வாழ்த்துத் தெரிவிக்க மட்டும் அல்ல! தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேச நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் தான்!!

சிகரம் உங்கள் உயரம்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் பயிலரங்கம் 17.05.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கோவையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.என். சுப்ரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார்.

யாருக்கு மூளை பெரிசு?

நி மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 75 கிலோ மீட்டரைவிட அதிகம்! நி மனித மூளையின் எடை, மனித உடையில் சராசரியாக 1.5% பங்கு. அதாவது, மூளையின் எடை 1.5 கிலோ

வாழ்விலும் பொருள் தேவை

திண்டுக்கல் சிகரம் தொடக்கவிழாவில் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நேற்று உலகத்திற்கு எது துன்பமாகத் தெரிந்ததோ, அதை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்குப் பெயர்தான் அறிவு. அந்த சமூகத்தின் பார்வை அறிவார்ந்த பாதை. பெரும்பாலும் நாம் விளம்பரப்படுத்தப் படுபவர்களைப் போலவே வாழ நினைக்கிறோம்.

நம்பிக்கை சாவதில்லை

மணமகள் பெயர் கேட்டி. வயது 21. மணமகன் பெயர் நிக். வயது 23. இருவருமே பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்குமே உயிரைத் தின்னும் கொடிய நோய்கள்.

புத்திக்குள்ளே புதையல் வேட்டை

1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?