BPO துறை மீண்டும் மலரும்

Atom Multi Media திரு. மதன் மோகன் அவர்களுடன் நேர்காணல் உங்களைப் பற்றி? என் பள்ளி படிப்பு முழுவதுமே ஊட்டியில்தான். நான் இளநிலை வணிகவியல் பட்டத்தை, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றேன். எனது எம்.பி.ஏ. பட்டப்படிப்பை பாரதியார் மேலாண்மை பள்ளியில் பயின்றேன். முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்த காலம்

அந்த காலம் இந்த மாதம்

ஜுன் 1 1980 சி.என்.என் நிறுவனம் இந்த நாளில் மாலை 6.00 மணியளவில் ஒளிபரப்பைத் தொடங்கியது – “உலகம் அழியும் வரை எங்கள் ஒளிபரப்பை நிறுத்த மாட்டோம். உலகம் அழிவதையும் ஒளிபரப்புவோம்” என்று சொன்னார், அதன் தலைவர் டெட்டெர்னர் பிலிக்.

நமது பார்வை

நிலையான அரசு! நம்பிக்கையான எதிர்காலம! பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பொரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள். செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்றார். மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன்னார், “நான் யார் தெரியுமா?”. கடை ஊழியர் பணிவாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார். “நான் யார் தெரியுமா? உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்ததும் “நான் யார் தெரியுமா?” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. “நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார். அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது. ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன. அழகிலும் அறிவிலும்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

வேலைக்கு ஆள்கிடைக்காத வேளையில்கூட தன்னிடம் பணிபுரிபவர்களைத் தக்கவைக்கும் தொழிலதிபர் ஒருவரை, பத்திரிகையாளர் சந்தித்து அதுபற்றிக் கேட்டார். “என்னிடம் பணிபுரிபவர்களின் தகுதிக்குறைபாடு களுக்கோ செயல்திறன் குறைபாடுகளுக்கோ அவர்களை நான் கடிந்து கொள்வதில்லை. இன்னும் சிறந்த

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

அந்தக் கடைக்குப் பெயரே அணையா விளக்குகளின் கடை. எப்போதும் விளக்குள் எரிந்துகொண்டே இருக்கும். நீடித்துழைக்கும் பல்புகளை எங்கே வாங்குகிறார்கள் என்றறிய ஆர்வம்கொண்டு ஒருவர் அணுகினார். விசாரித்தபோது விபரம் புரிந்தது. அவர்களும் எல்லோரும் பயன்படுத்தும் பல்புகளைத்தான் வாங்குகிறார்கள். ஒன்று

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான். “இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது. மறுநாள்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

கையில் கருவிகளுடன் காட்டுக்குள் தினமும் செல்லும் இளைஞனைக் கண்காணித்து வந்தார் அந்தப் பெரியவர். தீவிரவாதியா? தலைமறைவுக் குற்றவாளியா? ஒருநாள் பின் தொடர்ந்தார். பாறைகள் நிறைந்த பகுதியில் பூமியைத் தோண்டி தண்ணீர் தேடிக் கொண்டிருந்தான் அவன். விசாரித்தபோது விபரம் தெரிந்தது. வேலை தேடிவந்தவன் அவன். வேலை கிடைக்கவில்லை. உழைக்காமல் வீட்டிலிருக்க உள்ளம் ஒப்பவில்லை.

நமக்குள்ளே

மே – 2009 நமது நம்பிக்கை அட்டை சுவாமி விவேகானந்தரைத் தாங்கி, “விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதை” என்ற தலைப்புடன் காண்போர் அனைவரையும் கவரும் வண்ணம், சிந்திக்கும் வண்ணம் அமைந்து இருந்தது. மே மாதச் சூழலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதையில் தங்களின் சேவைகளைத் தொடர ஆரம்பித்தால்