அரவணைப்பு : இந்த யுகத்தின் உடனடித் தேவை

– தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எது ஆன்மீகம்? மனிதனுக்குள் மறைந்து இருக்கிற மனிதத்தை தெய்வீகமாக மாற்றுகின்ற செய்களம் எதுவோ அதுவே ஆன்மீகம். ஆனால், அதை விட்டுவிட்டு, ஆன்மீகம் என்பது இன்றைக்கு புரோகிதத்தின் கூடாரமாக ஆகிவிட்டது. கடவுளே எதிரே வந்தாலும் சற்று தள்ளி நில், நான் சடங்குகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்கிற பூசாரியைக் கடவுளாக … Continued

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி தொடர் 8 நமது உரிமைகளை உணர்ந்து கொள்ளுதலும், அவற்றிற்காகப் போராடுவதும் ஆளுமைத்திறன் என அறிந்துகொண்டோம். நமது உரிமை எதுவெனத் தெரிந்தால்தான், அதன்மீது பிறர் ஏறி நிற்க முயலும் போது அவர்களின் அத்துமீறலை எதிர்கொள்ள இயலும்.

சந்தைப் படுத்துவோம்… சாதனை குவிப்போம்!

– தி.க. சந்திரசேகரன் தொடர் 17 பொருளின் தேவை அதிகமாகவும், அதற்கேற்ப உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும்போது நிச்சயமாக அப்பொருளினைப் பரவலாக சந்தைப்படுத்த இடைமனிதர்கள் தேவை. அவர்களுக்குப் பல பெயர்கள் தரலாம். தரகர்கள் (ஆழ்ர்ந்ங்ழ்ள்) கமிஷன் ஏஜெண்டுகள், ஏகபோக விற்பனை ஏஜெண்டுகள் என்றெல்லாம் இடைநிலை மக்கள் இருக்கிறார்கள். இடையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்போது, விற்பனை செய்வோரும் … Continued

ஒளிமயமான எதிர்காலம் : பணக்காரனாவது எப்படி?

– சுகி சிவம் தொடர் 8 இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒட்டிப் பிறந்த இரட்டையர், ஒரே மாதிரி இரட்டையர் என்று இருவகை. ஒரே மாதிரி இரட்டையர்கள் முகம் போல அகமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பழகப்பழக இருவரும் நேர் எதிர் என்று கண்டு … Continued

சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத் தொடர் 3 “பகல் கனவு காணவேண்டாம்” என்றது அந்தக் காலம். பகலோ இரவோ கனவு காணுங்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை. என்னைப் பொருத்தவரையில் கனவுகள் இல்லாத மனிதன் ஒரு பிணம்தான். வாழ்க்கைக்கு உயிரோட்டம் தருவதே கனவுகள்தான். ஒரு மனிதர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உறுதிப்படுத்த மருத்துவர், நாடிபிடித்துப் பார்ப்பார், இதயத் … Continued

என் அமெரிக்கப் பயணம் : பயண அனுபவங்கள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம்.

ஒளிமயமான எதிர்காலம்

– சொல்வேந்தர் சுகிசிவம் யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா? ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே … Continued

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே.பராசரன் சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா?

எளிது… எளிது… வெல்வது எளிது!

– முகில் தினகரன் நாளை மறுநாள் சாவித்திரி அந்த ஊருக்குப் புறப்படுகிறாள்.முன்னதாக இன்றே மேஜை, நாற்காலி, கண்ணாடிகள், அலமாரிகள், மற்றும் ஒரு மகளிர் அழகு நிலையத்திற்குத் தேவையான அலங்கார வஸ்துகள், எல்லாவற்றையும் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு இப்போதுதான் அறைக்குத் திரும்பினாள். வந்தவள் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தொப் பென்று படுக்கையில் விழுந்து சோம்பல் முறித்தாள்.

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரைப் புண்படுத்தாமல் நமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள சில குறிப்புகள் * ஆளுமைத்திறனுடன் செயல்பட வேண்டிய அடுத்த வார, மாத நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவு செய்து, அந்நிகழ்வுகளின் போது எவ்வாறெல்லாம் சிறப்புடன் செயலாற்றலாம் என யோசித்து வைப்போம்.