ஞாபக வேர்களுக்கு நீரூற்றுங்கள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பாஸ்டன் நகரத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு அன்றைய தினம் மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். மாணவிகளும், ஆசிரியர்களும், ஏன் பள்ளியின் முதல்வரும்கூட அவருடைய உரையை கேட்பதற்காக மிக ஆவலாக அவரின் வருகையை எதிர் பார்த்திருந்தனர்.

எது உங்கள் சீட் பெல்ட்

– கனகலட்சுமி காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது … Continued

மனங்களில் முதலீடு

மனித நேய அறக்கட்டளை நிறுவி மகத்துவப் பணிகள் புரியும் திரு.சைதை துரைசாமி அடையாளம் தெரியாத ஒரு கிராமத்தில் தோன்றி ஏழ்மையான பொருளாதாரக் குடும்பச் சூழலில் பிறந்தேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டேன். அந்த இலட்சியம் எனக்கு என் பள்ளி பருவத்திலேயே தோன்றிய ஒன்று. சென்னைக்கு 1971ஆம் ஆண்டு … Continued

இந்த விதைகள் மரிப்பதில்லை..!

-தே. சௌந்தர்ராஜன் கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது … Continued

நமக்குள்ளே

அனுராஜனின் ‘மாத்தியோசி’ தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.

வெற்றி தரும் நினைவாற்றல்

– கிருஷ்ண வரதராஜன் நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சி தொடர் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத் திலிருந்து திரும்பியதும் மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், “”இதோ பார்! இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா திருப்பிக் கொண்டு வந்திருக்கேன் பார்.”

மன ஒருமைபாடு

– சாதனா ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு மனதை ஒருமுகப்படுத்தி ஒரு செயலை செய்வதை ‘கான்சென்ட்ரேஷன்’ என்கிறார்கள்.

பிறந்தநாளை கொண்டாடுங்கள்

எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே இரண்டு பேரும் அவர்கள் குழுவினரோடு இமயத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

உணர்ச்சி… உணர்வு.. என்னங்க வித்தியாசம்..?

ஆசிரியர் குழுவினரின் அரட்டைக் கச்சேரி வெளியிலே கிளம்பறபோது ஒரு ஸ்ப்ரே எடுத்து விஷ்க்ன்னு அங்கே இங்கே அடிச்சுக் கறோமே! அது உணர்ச்சி. பூஜையறைக்குள்ள, பூக்களோட வாசனைக்கு போட்டியா, காற்றில் கை கோர்த்து கமகமன்னு வருது பாருங்க, ஊதுவத்தி வாசனை… அது உணர்வு. வ அலை போல வீசுகிறது உணர்ச்சி. ஆற அமர அனுபவிக்கிறது உணர்வு. ஜெயிக்கணும்னு … Continued

கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன் கணவன் மனைவி புரிதல் பற்றிய புத்துணர்ச்சித் தொடர் திருமணமான ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்துகொள்ள பத்து ஆண்டுகள் ஆகும்’ என்று, என் திருமணத்திற்கு முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் ஆன என் நண்பரிடம் இதைச்சொன்னதற்கு, ”பத்து என்று தெரியாமல் சொல்கிறீர்கள். இருபதாக இருக்கும்” … Continued