என்னைக் கண்டெடுத்தேன்

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது. அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது” வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.

லிப்ட் தத்துவம்

– கிருஷ்ண வரதராஜன் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத எழுத்தாளர் வேலை என்னுடையது என்பதால் பெரும்பாலும் நான் லிப்ட்டை தவிர்த்து படிகளில்தான் மேலேறுவேன். எதிர்படும் யாராவது, ”வாங்க சார். லிப்ட்ல போகலாம். சீக்கிரம் மேலே போகலாம்” என்பார்கள். ”நான் சீக்கிரம் மேலே போக விரும்பாததால்தான் படியிலேயே செல்கிறேன்” என்பேன், இரட்டை அர்த்தத்தோடு.

இரண்டரை இலட்சம் மரங்கன்றுகள்

ஆக்கப்பணியில் ஈஷாவின் ஆனந்த அலை!! சில மாதங்களுக்குள்ளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டதும், ஒவ்வோர் ஊரிலும் அந்த மரங்களை வளர்க்கப் பசுமைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும் சமீபத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்கள். விரைவில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.

வெற்றி வெளிச்சம்

– இயகோகா சுப்பிரமணியம் கரைகள் சரியாய் இல்லையேல் நதிநீர் கடலை அடையாது; கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் தொழிலில் வெற்றிகள் கிடையாது; சிங்காரச் சென்னை நகரம். விமான நிலையம் செல்வதற்கு நண்பர் சீனிவாசனது காரில் அவரே வண்டி ஓட்டிக்கொண்டுவர, நானும் அவரும் உரையாடியபடியே ஒரு சிவப்பு விளக்கு, பச்சையாக மாறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

திறமை மட்டும் போதாது

– வினயா எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் இருக்குமா என்ன? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமையாவது நிச்சயம் இருக்கும். இந்த உலகம் திறமைகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது.

உள்ளும் புறமும்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த, பெரியவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருக்கு எடுக்கப்பட்டிருந்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படத்தினை, அப்போது மருத்துவர் ஆய்வு செய்துகொண்டிருந்ததால் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், அறிவியல் வளர்ச்சி பற்றியும் அதனால் மருத்துவத்துறை பெற்றிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றம் பற்றியும் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.

உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

– கிருஷ்ணன் நம்பி வேலைக்கு ஆட்கள் தேவை. அற்புத சுகமளிக்கும் கூட்டம். ஆறே வாரத்தில் சிகப்பழகு. டிசைனர் சாரீஸ். மூலம் பவுத்திரம் நிரந்தரத் தீர்வு’ இப்படி திரும்பிய திசையெங்கும் விளம்பரங்கள். ரேடியோ கேட்டால் விளம்பரம். டிவியை பார்த்தால் விளம்பரம். பத்திரிகையை திறந்தால் விளம்பரம், ஏன் தெருவில் நடந்தால்கூட சுவரெங்கும் விளம்பரங்கள். =சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்.’

பைவ்ஸ்டார் VS சூப்பர்ஸ்டார்

அத்வைத் சதானந்த் ஸ்டார் என்றால் பெரும்பாலும் நமக்கு ஏனோ சினிமா நட்சத்திரங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தால் மட்டும்தான் ஸ்டார். இல்லை யென்றால் பளபளப்பு மங்கிவிடும். பைவ் ஸ்டார் என்ற வார்த்தையை ஹோட்டல் துறையில் மட்டும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பறந்துகொண்டே மீன் பிடியுங்கள்..!

– மகேஷ்வரி சற்குரு ” ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.

வால்போஸ்டர்

உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர் தோல்வி என்பது கம்ப்யூட்டர் ஹேங்க் ஆவது போலத்தான்.. அடுத்து செய்வது ரீ-ஸ்டார்ட் என்பதைத்தான் அது சொல்கிறது.