புது வாசல்

நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’

வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம் கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், … Continued

வெற்றிப்பாதை

– இயகோகா சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்து, ஆணைகள் ஓச்சி, ஒரு சிலர் வென்றிடலாம்; இறங்கிப் பழகி அன்புடன் அணைத்தால் என்றும் நிலைத்து நின்றிடலாம். இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கும்போது, தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த மகா கேவலமான ஜனநாயகத் தாழ்வைப்பற்றி விமர்சிக்க நிறைய ஊடகங்கள், விமர்சகர்கள் உள்ளனர். நாம் கவனிக்க … Continued

உங்களுக்குத் தெரியும் என்பது தெரியுமா?

– பாவை வித்யாஷ்ரம் அறிமுக விழாவில் டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அந்தப் பேராசிரியரின் பெயர் ராமசாமி. கல்லூரியின் என்.சி.சி அலுவலரும்கூட. “பாபு! என்னை அறையில் வந்து பார்!” என்றந்த மாணவனை அழைத்ததில் மாணவர் பதறிப் போனார். கல்லூரி மாணவர்களைக்கூட கை வைக்கும் அளவு கண்டிப்பான ஆசிரியர் அவர். அறையில் வைத்து அறை கொடுப்பாரோ என அஞ்சியபடியே … Continued

கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன் ஒரு திருமண நாளில் எங்கள் திருமணத்திற்கு வந்த பரிசுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம். நண்பரொருவர் தந்த ஒரே மாடலில் அமைந்த டைட்டன் வாட்சுகள்தான் பட்டியலில் முதலில் இருந்தது. “இவர்கள் கணவன் மனைவி என்று எல்லோருக்கும் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒரே மாடலில் வாங்கிக் கொடுத்தீர்களா?’ என்றேன். “லேடீஸ் வாட்ச் அளவில் சிறியது. … Continued

வெற்றிக்கொடி கட்டு

திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் … Continued

பொறுமையும் வேகமும்

– ருக்மணி பன்னீர் செல்வம் வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார். சொன்னபடி மறுநாள் … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

மனநல நிபுணர் ருத்ரன் பதில்கள் ரமண மகரிஷி, புத்தர் போன்றவர்கள் ஞானமடைதல் பற்றிக்கூறுவதை புத்தகம் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்கிறோம். இதில் அறிவியலின் பங்கு என்ன? ராஜ்குமார், கோவை. இராமகிருஷ்ணர் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகங்களின் மூலமாகத்தான் அவர்களை அறிந்து கொள்கிறோம். இது ஒருபடி தான். காரல் மார்க்ஸினுடைய டாஸ் கேப்பிடலை படித்து முடித்து விட்டால் … Continued

இப்படியும் நடக்குது

குடியிருப்புப்பகுதியில் நாய் வளர்ப்பது வெகு சிரமம் என்று கருதியிருந்தோம். ஆனால் எங்கள் பொமரேனியன் நாய் டைகர், எங்கள் குடியிருப்பு முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம்மைத் தெரியாதவர்களுக்குக்கூட நம் நாயைத் தெரியும் என்பார் என் கணவர். ஒரு தடவை பொது விருந்தொன்றில் ஒருவரை எங்கள் உறவினர் அறிமுகம் செய்தார்.