நமது பார்வை
நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.
வன்முறை இல்லாத வல்லரசு வல்லரசுக் கனவுகள் ஒருபுறம் – வன்முறை நிகழ்வுகள் மறுபுறம். ஆதாயத் தொழில்கள் ஒருபுறம் – ஆட்குறைப்பும் நிதிநெருக்கடியும் மறுபுறம். இந்தியனின் வல்லரசுக் கனவின் வேர்களை அசைக்கும் விதமாய் இந்த முரண்பாடுகள் முள்ளாய் உறுத்துகின்றன.
சவால் என்னும் சிறந்த வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதிநிலையிலும் உலகந்தழுவிய நிலையில் ஏற்படும் பின்னடைவுகளின் பொழுதுகளில், இந்தக் கல்வியாண்டின் நிறைவை நோக்கி நகர்கிற இலட்சக்கணக்கான மாணவர்களின் இதயங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
வதந்தியை முடக்குங்கள் முளைக்கும் தலைமுறை முடங்கிவிடாமல் காப்பதற்கென்று போலியோ சொட்டு மருந்து தருவதை அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்புடன் செய்து வருகின்றன.
இலங்கையில், அப்பாவித் தமிழர்கள் மீது நல்க்கும் தாக்குதலும், அவர்களின் வாழ்வுரிமைக்கு பாதிப்பு விளைவிக்கும் நடவடிக்கைகளும் வருந்துதற்குரியவை. இந்திய அரசின் குரல் இன்னும் உறுதிபட ஒலித்து, போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
தன்னை வெட்டுபவர்களைக் கூடத் தாங்குகிறது நிலம் என்பதனால் “அகழ்வாரைத் தாங்கும் நிலம்” என்றார் திருவள்ளுவர்.
தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பரவலாக ஏற்படுத்தியுள்ள அதிருப்தியும் அது தொடர்பாக எழும் விவாதங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைதான் என்று அரசு சொல்கிறது. தேசம் முழுவதும் மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சமச்சீரான விநியோகம் நிகழுமெனில் அதுவே நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஒலிம்பிக் பந்தயங்களில் உலகம் காட்டும் ஈடுபாடும், வெற்றியாளர்களுக்கு அரசாங்கம் ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்குவதும் புரிந்துகொள்ளக் கூடியதே.
புகைப்பிடித்தலுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்துடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புகைப்பிடித்தலின் மூலம் ஏற்படும் நோய்களின் கொடுமையை விளக்கும் புகைப்படங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சிடுவது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசித்து வரவதாகத் தெரிகிறது. இது பாராட்ட வேண்டிய முயற்சி.
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.