பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த மாதம் இயக்குநர், நடிகர் திரு பாண்டியராஜன். (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். பிரேசிலில் நடைபெற்ற உலகளவிலான திரைப்பட விழாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட 55 குறும்படங்களில், ஆசியாவில் இருந்து … Continued

அவமானங்களை வெகுமானங்களாக்குவோம்

– ருக்மணி பன்னீர்செல்வம் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்று ‘தாவீது’ சிற்பம். இந்த சிற்பம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. அது மட்டுமின்றி மற்றவர்களை ஊக்கப்படுத்தக் கூடியதுமாகும். இத்தாலி நாட்டின் புகழ்மிக்க சிற்பி அகஸ்டினோ அன்டானியோ. இவர் சிற்பமொன்றினை வடிப்பதற்காக மிகப்பெரிய சலவைக்கல் ஒன்றை தேர்ந்தெடுத்து செதுக்கத் தொடங்கினார். எப்படிச் செதுக்கியபோதும் ஏனோ அவரால் … Continued

உள்ளொன்று வைத்து..

வழக்கறிஞர் த. இராமலிங்கம் எனக்கு நல்ல பழக்கம்தான் அவர்; அலுவலகத்தில் எல்லோருடனும் சிரித்துப் பேசுவார்; எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் ஏதாவது தீர்வு சொல்வார்… ஆனால் அலுவலக மேலாளரிடம் நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி, அவர் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார். எனக்குப் பெரிய சிக்கலாகி விட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் நண்பர் ஒருவர்.

அறிய வேண்டிய ஆளுமைகள்

கொலம்பஸ்: மிதந்து திரிந்த பறவை பிறந்தார் என்று தெரியும். ஆகஸ்ட் 26 ஆ அக்டோபர் 31 ஆ என்று சர்ச்சை. அமெரிக்காவைக் கண்டறிந்தார் என்று தெரியும். கண்டறிந்த முதல் ஐரோப்பியரா இல்லையா என்பதில் சர்ச்சை. இப்படி, சர்ச்சைகளின் நாயகனாகவே சரித்திரத்தில் சித்தரிக்கப்படுபவர்தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.

நமது பார்வை

கல்வி கரையில இது, பழம்பாடல் ஒன்றின் தொடக்கவரி. இருபத்தோராம் நூற்றாண்டில் இந்த வரிக்கென்று இன்னும் பல பொருளுண்டு. கல்வி நிலையக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சை பல ரூபங்கள் எடுத்து, பள்ளி உண்டு பாடம் இல்லை என்னும் நிலை வரை கொண்டு வந்துவிட்டுள்ளது.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

மனித வாழ்வின் மகத்தான சோகம் எதுவென்று சாதனையாளர் ஒருவரிடம் சில இளைஞர்கள் கேட்டார்கள். ”எந்த இலக்கையும் வகுத்துக் கொள்ளாமல், வாழ்வில் எதையுமே சாதிக்காமல் இருப்பதுதான் மகத்தான சோகம்” என்றார் அவர். இளைஞர்கள் புறப்பட நினைத்தபோது, ”இன்னொரு பெரிய சோகம் இருக்கிறது” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

வியட்நாம் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார். மேஜர் ஜேம்ஸ் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. அந்தச் சின்னஞ்சிறிய அறையின் தனிமையில், பைத்தியம் பிடிக்காமலிருக்க, தனக்குப் பிரியமான கால்ஃப் விளையாட்டை மனதுக்குள்ளேயே விளையாடிப் பார்த்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

அந்தப் பணக்காரச் சிறுவனுடன் ஏழைச் சிறுவன் ஒருவன் கட்டிப் புரண்டு சண்டை போட்டான். தோற்றுப் போனதும் ஏழைச் சிறுவன் சொன்னான். ”உன்னைப் போல நல்ல சாப்பாடு கிடைத்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பணக்காரச் சிறுவன் அதிர்ந்து போனான். அன்று முதல் எளிய ஆடைகளே அணிந்தான்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

எண்பது வயது தாண்டியும் மகிழ்ச்சியாய்த் தோற்றமளித்த மனிதர் ஒருவரைக் கண்ட இளைஞர் பணிவுடன் கேட்டார். ”அய்யா! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறீர்கள். சரிதான். ஆனால், எதையாவது இழந்தோமே என்று வருந்துகிறீர்களா?”. பெரியவர் சொன்னார், ”இல்லை! இழந்த நிமிடங்களை மீண்டும் பெற முடியாது என்பதால், எதிர்வரும் விநாடிகள் ஒவ்வொன்றையும் முழுமையாய் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் … Continued