சிரி சிரி.. சிரிப்பு….. அடக் கடவுளே!

posted in: தொடர்கள் | 0

1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.

உத்தி’யோகம்’ உண்டா உங்களுக்கு…

posted in: தொடர்கள் | 0

ஹலோ! ஹலோ! தலைப்பைப் பார்த்ததுமே, “உங்களுக்கு வேலை உண்டா”ன்னு கேக்கறதா தப்பா எடுத்துக்காதீங்க! உத்தியோகம், அப்படீங்கறது நாம பார்க்கறவேலைதான் ஒத்துக்கறேன். ஆனா, நம் வேலையை காலையிலேருந்து மாலை வரை ஒரே மாதிரி செய்துகிட்டே போனா, உற்சாகமாகவும் இருக்காது. புதுசா எதையும் செய்யவும் முடியாது.

கொக்கு! பற! பற!

சிவராமன் வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுகவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.

வெற்றிப் பாதையில் வழித்துணை – லேனா தமிழ்வாணன்

மரபின்மைந்தன். ம.முத்தையா ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.

புதியதோர் உலகம் செய்வோம்

– இரா.கோபிநாத் நமது மூளை, பிறக்கும் போது தகவல் பதிவு செய்யப்படாத ஒரு வெற்று குறுந்தட்டு போன்றது. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தகவல்கள் மாத்திரமே அதில் பொதிந்திருக்கும். பிறகு நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதில் பதிவாகின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது சிந்தனைத் திறனை வடிவமைக்கின்றன.

நமது நம்பிக்கை ஆண்டு விழா

-பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழின் முதலாம் ஆண்டு விழா கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் 8-5-2005 அன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் 5 மணியிலிருந்தே அரங்கில் குவியத் தொடங்கினர்.

பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!

– சிவராமன் ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 … Continued

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்!

மரபின் மைந்தன்.ம.முத்தையா அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன?

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

-மரபின்மைந்தன். ம. முத்தையா காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.