கான்ஃபிடன்ஸ்கார்னர் -6
அந்த மனிதருக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை. புதிதாக வீடு கட்டியிருந்தார். புதுமனை புகுவிழாவிற்கு நண்பர்களை அழைத்திருந்தார். எல்லா நண்பர்களுமே அந்த மனிதரின் அழகிய புகைப்படம் ஒன்றை பெரிதாக்கி சட்டமிட்டு அன்பளிப்பாக ஆளுக்கொன்றை அளித்தார்கள். காரணம் கேட்ட போது நண்பர்கள் சொன்னார்கள், “உனக்கு நிலைக்கண்ணாடியைப் பரிசளிக்க
கான்ஃபிடன்ஸ்கார்னர் -5
யார் பிச்சைக்காரன் என்பதில் ஓர் அறிஞர் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தது. அவர் தெளிவாகச் சொன்னார். “பிச்சை எடுப்பவனை எல்லாம் பிச்சைக்காரன் என்று சொல்ல முடியாது. சராசரியான பிச்சைக்காரன் ஒருவனின் வாழ்க்கையை முதலில் பாருங்கள். மூன்று அம்சங்கள் தெரியும். முதலாவதாக, எது நடக்க வேண்டும் என்பது அவன்
கான்ஃபிடன்ஸ்கார்னர் -4
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -3
கல்லுடைக்கும் வேலை அவனுக்கு. ஒரு வணிகரின் மாளிகையைக் கடந்து போகும் போதெல்லாம் பெருமூச்சு விடுவான். “நானும் வணிகனாய் இருந்தால் வசதியாய் வாழலாமே”. கொஞ்ச நாட்களில் வணிகன் ஆனான். ஓர் அதிகாரியைக் கண்டால் வணிகர்கள் பயந்தார்கள். அதிகாரி ஆக நினைத்தான். ஆகி விட்டான்.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -2
கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிஸிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனே என்று சிஸிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிஸிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான்.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -1
தன் பிறந்த நாளுக்கு, தானே கைப்பட செய்த பைகளையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டுபோய் முதியோர் இல்லங்களில் விநியோகிப்பது அந்த இளம்பெண்ணின் வழக்கம். அந்த ஆண்டு குழந்தை பிறந்திருந்தது. எனவே, கைப்பைகள் செய்ய நேரமில்லை, ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றெல்லாம் யோசித்த போது வேறொன்று தோன்றியது. முதியோர் இல்லத்திற்குத் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள் அந்தப்பெண்.
புலப்படுத்து
– மரபின் மைந்தன் ம. முத்தையா நகரும் நிமிடங்கள் முதலீடு – இதில் நஷ்டக் கணக்குகள் கூடாது சிகரம் தொடுவது நம் இலக்கு – இதில் சுணக்கம் என்பதே ஆகாது! முகமில்லாத தினங்களுக்கும் – ஒரு
நமக்குள்ளே
நமது நம்பிக்கை ஜனவரி இதழில் வல்லமை தாராயோ ஸ்டாலின் குணசேகரன் அவர்களது உரை வீச்சு மிக அருமை. கிருஷ்ணா அவர்களின், “ஒபாமா சொல்லும் மாற்றம் உங்கள் வாழ்விலும்தான்” எனும் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. “தவறுகள் எதனால் நிகழ்கின்றன” என்ற பிரதாபனின் கட்டுரை தவறுகளை திருத்திக் கொள்ள உபயோகமாக இருந்தது. நமது நம்பிக்கை மேலும் சிறப்படைய … Continued
முழுதாய் மலரும் மொட்டுக்கள்
– சி. வாணி ஒரு மொட்டுக்கு மலர்கிற துணிச்சலில் ஏற்படும் வலியைவிட இறுக்கமாக மூடிக்கிடப்பது மிகவும் வலியைத் தருவது” – இது ஓர் அறிஞரின் வாசகம். “அந அ ஙஅச பஏஐசஓஉபஏ” என்ற நூலில் இடம்பெற்ற சிந்தனை இது. மூடிக்கிடக்கிற மொட்டின் இதழ்கள் உதிராது. காற்றிலோ மழையிலோ சேதமுறாது. ஆனால் ஒரு மொட்டின் முழுமையை மலர்ச்சியில்தான் … Continued
சர்வம் மார்க்கெட்டிங் மையம்
– பேரா. சதாசிவம் சந்தையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் நுகர்வோர்கள் அந்தப் பொருளைப்பற்றி தம் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமான அம்சமாகும். இது தாமாக அமைவதில்லை. ஒரு நிறுவனமானது தம் பொருட்களைப் பற்றி மக்கள் எப்படி நினைக்க வேண்டும், என்னவென்று நினைக்கவேண்டும் எந்த அளவில் தம் மனதில் இடம்தர வேண்டும் என்பதை ஓரளவு யூகம் … Continued