கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-2

ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.

நமக்குள்ளே

“ஓர் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை “யாரோ போட்ட பாதை” தொடர் காரண – காரியங்களோடு விளக்குவது புருவங்களை விரிய வைப்பதோடு நில்லாமல் நம்மளையும் முயற்சி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது. – கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணபுதூர்.

காலம் உங்கள் காலடியில்

தொடர் – 8 -சோம.வள்ளியப்பன் நேர மேலாண்மை ரகசியம் அது ஒரு மருத்துவரின் கிளினிக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். அதே தெரு. அதே கட்டிடம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதிக வேறுபாடு இல்லாததால் சுலபமாக கண்டுபிடித்தேன். ஆனால், வராண்டா தாண்டி உள்ளே போனதும் கண்ணில் பட்ட இடம் மிகவும் புதியதாக இருந்தது. பிரமிப்பு … Continued

எட் ஃபோர்மென் சொல்லும் எட்டு வழிகள்

வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகளை வழங்குகிறார் எட் ஃபோர்மென்.

செங்கோல்: இதனை இதனால்

– இரா.கோபிநாத் தொடர் – 23 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அழ்னை அவன்கண் விடல் -என்றார் வள்ளுவர். ஏன் சார், நானே செய்து முடித்து விட்டால்? எனக்கே எல்லா நல்ல பெயரும் கிடைக்குமே? நான் வேகமாக முன்னேற முடியுமே?

யாரோ போட்ட பாதை : எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

– தி.க. சந்திரசேகரன் “வாழ்க்கை உங்களுக்கு என்ன கொண்டுவந்து சேர்க்கிறது என்பதைவிட, வாழ்க்கைக்கு என்ன மனப்பான்மையை நீங்கள் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் என்பதும்; வாழ்க்கையில் என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுமே உங்கள் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது”.