கான்பிடன்ஸ் கார்னர் – 3
புத்தர் தன் சீடர் ஆனந்தருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார். அவர் நெற்றி மீது ஈ ஒன்று உட்கார்ந்தது. அனிச்சையாகக் கையை அசைத்து ஈயை ஓட்டிவிட்டார் புத்தர். சற்று தூரம் சென்றவர் “சட்”டென நின்றார். கண்களை மூடி, கையை மிக மெதுவாக நெற்றிக்கருகே அசைத்து இல்லாத ஈயை ஓட்டினார்.