திண்டுக்கல் சிகரம் உங்கள் உயரம் துவக்க விழா

கவிப்பேரரசு வைரமுத்து பேருரை முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. ரயில் ஒரு குகைக்குள்ளே செல்கிறது. அப்போது அது இருளில் இருக்கிறது. நிச்சயமாக அது இருளை விட்டுவரும். ரயிலில் வெளிச்சம் படும் என்று சோம. வள்ளியப்பன் சொன்னார்.

அந்தக் காலம் இந்த மாதம்

மே 1 1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று … Continued

நமது பார்வை

நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.

நமக்குள்ளே

“கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது” என்னும் வரிகளில் சமூகத்தின் நாடித்துடிப்பினை நயம்பட விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை வெகு சிறப்பு. திரு.சூரியதாஸ், சிலட்டூர்

சிகரம் உங்கள் உயரம்

அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை ரவி தமிழ்வாணன் பாராட்டு .ஏ.அப்துல்ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி 23-01-2009 அன்று நடந்தது. ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தொடங்கி மாயூரம் ஆசாத் பெண்கள்

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 4

அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

கால்பந்து மைதானத்தில் இரு நாடுகளுக்கிடையே போட்டி. அரங்கம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொண்டிருந்தன. இருவர் வெற்றிக்கும் ஒருவர் ஆர்ப்பரித்து கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவர் எந்த நாட்டை ஆதரிக்கிறார் என்பதில் கூடியிருந்தவர்களுக்குக் குழப்பம். அவரிடமே கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் எல்லா

கான்பிடன்ஸ் கார்னர்-2

அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான

கான்பிடன்ஸ் கார்னர்-1

விவசாயம் செய்து கொண்டிருந்த அந்த மனிதரின் நண்பர்கள் பலரும் வைரம் விற்பனை செய்து பெரும் செல்வம் குவித்தனர். இவரும் தன்னுடைய வயலை விற்றுவிட்டு வைர வியாபாரம் தேடிப்போனார். வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்தினார். இவரது வயலை வாங்கியவர், ஒரு நாள் வயலை உழுதபோது கிடைத்த கல்லை ஆய்வு செய்தார். அந்த வயலே வைரச் சுரங்கம்

இப்படியெல்லாம் இருங்கள்!

உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள். இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள். நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.