உள்ளும் புறமும்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த, பெரியவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருக்கு எடுக்கப்பட்டிருந்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படத்தினை, அப்போது மருத்துவர் ஆய்வு செய்துகொண்டிருந்ததால் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், அறிவியல் வளர்ச்சி பற்றியும் அதனால் மருத்துவத்துறை பெற்றிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றம் பற்றியும் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.

மூன்று சொற்கள்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர், வார இதழ் ஒன்றில் படித்த கதை ஒன்று அடிக்கடி நெஞ்சில் நிழலாடும். நள்ளிரவு நேரத்தில் தனியாகத் தொடர் வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண். அந்த நிலையத்தில், தொடர் வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது … Continued

விதைகளே இங்கு வேண்டப்படும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் அதிகாலையில் எழுவது, பழக்கப்படுவது வரை சிரமமானது. எழுந்து பழகிவிட்டால், அந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிடுவோம். வைகறைப் பொழுதுக்கு இணையான அழகும் இனிமையும், ஒரு நாளின் எந்தப் பொழுதுக்கும் கிடையாது. விடியற்காலையில் தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்… அந்தப் பொழுது எவ்வளவு சுகமானது என்று கூறுவார்கள்.

வெற்றி பிறர் தருவதில்லை

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப் புலவரின் பாடல் வரி ஒன்று, அனேகமாக எல்லாத் தமிழருக்கும் தெரிந்திருக்கும். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்…” என்பதே அவ்வரி. சிலர், இந்த வரியை, ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்…’ என்று, தவறாகப் புரிந்து கொள்ளலும் உண்டு.

குதிரையேற்றம்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தங்களது சுகமான பயணங்கள் தொடர, அவர்களுக்கு அடுத்தவரின் முதுகுகள் தேவைப்படும். நமது முதுகு, இப்படிப்பட்டவர்களின் கண்களுக்குப் படாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!

நினைப்பதும் செய்வதும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் கம்ப இராமாயணத்தில் ஒரு காட்சி, சீதையைத் தேடிவந்த அனுமன் அசோகவனத்தை அழித்து இராவணனை மிரட்டி, வாலில் வைத்த தீயில் நகரத்தை எரித்து மீண்டபின், அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான் இராவணன்.

எனக்கே எனக்கா?

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள். ஒவ்வொருவரும் மானத்துடன் உயிர் வாழ்வதற்கு இவை தேவையாகின்றன. எனவே இவை மூன்றும் எனக்கு வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. இவற்றைப் பெறுவதற்கான முயற்சியில் ஒருவர் ஈடுபடுவதிலும் தவறில்லை.

பாராட்டு என்னும் மழை!

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் “அணிலுக்கு அதன் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் எப்படி வந்தன தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதிலும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எல்லா இந்தியனுக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.

இவையிரண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் புதுவை கம்பன் கழக மேடையில் நடந்த ஒரு நிகழ்வு. அடிக்கடி நெஞ்சில் நிழலாடும். ஒரு கருத்தரங்க மேடையில் அமர்ந்திருந்தோம். மறைந்த இலக்கிய வித்தகர் திருச்சி இராதாகிருஷ்ணன் தலைவராக