வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

பேப்பர் முழுக்க வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரங்கள் வரும் காலத்தில், இனிவரும் நாட்களில் தலைப்பு செய்திகள் இப்படி இருக்கலாம் – எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில், வேலைக்கு 20 பேர் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த தினசரி அன்று பரபரப்பாக விற்கும். அந்த அளவிற்கு வேலைக்கு ஆட்கள் இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. நிறுவனங்கள் நடத்துகிறவர்கள் வீட்டில் இருக்கும் … Continued

இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்

-கிருஷ்ண வரதராஜன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட உட்கார்ந்தார் முல்லா நஸ்ரூதீன். சில்வர் டம்ளரை லொட் என்று வைத்து, அதில் தண்ணீர் ஊற்றியபடி, ‘என்ன சாப்பிடறீங்க?’ என்று அலட்சியமாக கேட்டார் சர்வர். முல்லா ஆர்டர் கொடுத்த ஐட்டங்கள் ஒவ்வொன்றும் அலட்சியமாகவே பரிமாறப் பட்டன. முல்லாவை பார்த்தால் டிப்ஸ் கொடுப்பவர் போல தெரியாததால் சர்வர் பில்லைக்கொண்டு வந்து டேபிளில் … Continued

உளிகள் நிறைந்த உலகமிது!

-மரபின் மைந்தன் ம. முத்தையா கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே, பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புக்களைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் என்று பெயர்.

மனமே உலகின் முதல் கணினி

என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் தமிழில்: கனகதூரிகா கணினி, இன்று இயந்திரம் என்பதை தாண்டி மனிதர்களின் இயக்கமாகவே மாறிவிட்ட வேளையில், கணினியை கண்டறிந்தவர்கள் யார்? அது எப்படி இருந்தது? என்று ரிஷிமூலம் தேடி பலரும் பயணப்படுகின்றனர். நம்முடைய மனம்தான் உலகின் முதல் கணினி என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் இடமிது.

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்..!

-சிந்தனைக்கவிஞர் கவிதாசன் முதன்முதலாக எனது மேடைப் பேச்சு, கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில்தான் அரங்கேறியது. உலகநாடுகளிடையே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறதா? நிற்கவில்லையா? என்பதுதான் தலைப்பு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இருவர் கலந்துகொண்டு ஒருவர் தலைப்பை ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேச வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா மைக்கேல் சௌல் டேல் சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை. எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

– ருத்ரன் பதில்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி? திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற … Continued

வெற்றி மேடை ஏறினேன்

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும் நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது தம்பி, உள்ளே வா!” என்றார். எங்களுடைய துறையின் தலைவர் டாக்டர் பெருமாள். அச்சத்தோடு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.

கை விளக்கு

இசைக்கவி ரமணன் எழுதும் புதிய தொடர் முட்டையை விட்டு வரும் மூர்க்கம் இல்லையேல் இந்த சட்டைதான் என்றும் சதம் அந்தக் குளியலறையில் ஒரே சத்தம். மனிதர்களின் கூச்சல் அல்ல. சென்று பார்த்தால், ஒரு காக்கை குருவிக்கூட்டுக்குள் புகுந்து ஒரு குருவிக் குஞ்சைக் களவாடிக் கொண்டிருந்தது. பெற்றோர் குருவிகள் அதை மூர்க்கமாகத் தாக்கின. பறக்கக் பறக்கக் கூச்சலிட்டபடியே … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா விற்பதற்கு ஒன்றுமில்லை உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியதே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடை வெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை … Continued