நமக்குள்ளே

“சொல்லுதல் யாருக்கும் எளிதாம் எளிது சொல்லிய வண்ணம் செயல்!” என்று கண்டிப்பாக மாற்றித்தான் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு “நமது நம்பிக்கை” ஊக்கமும், உற்சாகமும், அளிக்கின்றது. பிற புத்தகங்கள் படிப்பவர்கள் “உலக எண்ணிக்கையில் ஒருவர் என்றால்’ நமது நம்பிக்கை படிப்பவர்கள் “உலகம் எண்ணுகையில் ஒருவராக திகழ்வார்” என்பது திண்ணம்! வாழ்க உமது சேவை! வளர்க உமது புகழ்!

வெற்றி நம் கைகளில்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் ! கதவு திறந்தால் கனவு பலிக்கும்! – கவியரசு கண்ணதாசனின் வரிகள் மிகச் சுலபமாக வெற்றி எப்படிப் பெறுவது என்று சொல்கிறது. முயற்சி, தொடர் பயிற்சி இரண்டும் கலந்து பயணிக்கையில் நம் ஆளுமைக் கதவுகள் திறக்கின்றன. ஆளுமைப் பண்பு உச்ச நிலைக்குச் செல்லும் போது வெற்றிக் கனவாக இல்லாது நனவாக … Continued

அது வேறு இது வேறு

இப்படி சில விஷயங்களைப் பிரித்துப் பார்ப்பவரா நீங்கள்? இருங்கள் – கொஞ்சம் பேசலாம். உங்களை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்கிறபோது என்னென்ன விவரங்கள் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்….. இன்னாரின் வாரிசு! இன்னாரின் வாழ்க்கைத் துணைவர்! இன்ன வேலை செய்கிறார்! இந்த விவரங்களில் உங்கள் தனி வாழ்க்கை – பொதுவாழ்க்கை – இரண்டுமே அடக்கம்.

வேலை இழக்க நேர்கிறதா?

உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.

வீட்டுக்குள் வெற்றி

என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் பத்துலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் 8 லட்சம் பேரும் தங்கள் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கப்போகும் நேரம் இது.

இன்னொரு தடவை சொல்லுங்க!

நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்

ஒரு மனிதன் எதையெல்லாம் கொண்டாடலாம்? பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள்… இப்படித் தொடரும் நிகழ்வுகள். சிலர் கொண்டாடுவதற்கென்றே நாட்களை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கையின் சுமையை துளித்துளியாய் ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.

பாதை காட்டுகிறார் பாப்லோ நெருடா

1. உங்கள் வாழ்வில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய விஷயம், உங்களை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வது. 2. பழைய தவறுகளின் சாம்பலில் இருந்துதான் புதிய திறமைகளும் புதிய பண்புகளும் உயிர்த்தெழ முடியும்.

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள் தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ … Continued