நமக்குள்ளே

இசைக்கவி ரமணன் அவர்களின் வார்த்தைகள் மிக அருமை. கூற வந்த கருத்துக்களை மிகச்சரியான வார்த்தைகளைக் கொண்டு அழகாய் விவரித்துள்ளார். படிக்கப் படிக்க மனம் ஆழ்ந்து போகிறது. அவரின் எழுத்துக்களுக்கு எனது நன்றிகள். பிரவீணா பிரபாகரன், கோவை. ஒரு வாசகத்தை படித்தால் சில நொடிகளில் மறந்து போகும், ஒரு கதையை படித்தால் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கும். … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 1

மங்கோலிய நாட்டின் கதை ஒன்று. நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும் ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலங்களில் ஏதேனும் ஒரு புற்றில் நுழைந்து ஒளிந்து கொள்ள பாம்புகள் நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும்போதே இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை … Continued

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்

-அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் … Continued

ஜவஹர்லால் நேரு – வாசிப்பில் நேசிப்பு

ஜவஹர்லால் நேரு- – வாசிப்பில் நேசிப்பு ழந்தைகளால் மட்டுமின்றி குவலயத்தாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு வாசிப்பில் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் லிஃப்டில் பயணம் செய்த பொழுதொன்றில் மின்வெட்டு காரணமாய் லிஃப்ட் நின்று விட்டது. தொழில்நுட்பம் பெருகியிராத அந்தக் காலத்தில் கதவைத் திறக்க நேரமாகிவிட்டது. வியர்வையில் குளித்தபடி வெளியேவந்த நேரு அமைதியாகச் சொன்னாராம், “இங்கே … Continued

திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்

நேர்காணல் -சோமவள்ளியப்பன் திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிக அளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.

அன்று இன்று

அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு … Continued

நமது பார்வை

உங்கள் வாழ்வில் உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நேரமிது. ஊக்கத்துடன் வாழ்வை நிகழ்த்த விரும்பும் நமக்கும் உள்ளாட்சி குறித்த புதிய விழிப்புணர்வு தேவை. உள்ளாட்சி என்றால் ஊர்நிலையில் அல்ல. உள்நிலையில் நிகழும் உள்ளாட்சி. ஒரு மனிதர் தன் உடல் நலனை நிர்வகிப்பதும், உள்ள உணர்வுகளை ஒழுங்கு செய்வதும், மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி தியானம் மூலம் உள்நிலையில் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 6

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

“நீண்ட காலமாய் உங்களுடனே இருக்கிறேன். உங்களுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு எதுவுமே சொல்ல விலையே?” குருவிடம் கேட்டான் சீடன். “வார்த்தைகள் சொன்னால் எதையோ சொல்லித் தருகிறேன் என்று பொருள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடரொருவர். புத்தருக்கு அவர் தந்த அறிக்கை: “புத்தாடை அணிந்தேன். பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டிருக்கிறேன். பழைய படுக்கை விரிப்பை ஜன்னல் திரைச்சீலை