அந்தக் காலம் இந்த மாதம்

மே 1 1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று … Continued

நமக்குள்ளே

“கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது” என்னும் வரிகளில் சமூகத்தின் நாடித்துடிப்பினை நயம்பட விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை வெகு சிறப்பு. திரு.சூரியதாஸ், சிலட்டூர்

அவரும் நீங்களும்

-சிவராமன் – விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.

திட்டமிடு தொட்டுவிடு

-மகேஸ்வரி சற்குரு விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்! “தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.

உழைக்கத் தெரிந்த உள்ளம்

– சீராளன் உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.

வெற்றியை விதைதிடுவோம்

கே.ஆர் . நல்லுசாமி படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று. நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை … Continued

எதிர்வரும் நாளை எதிர்கொளளத் தயாரா?

<p align="right Win Back Ur Ex Girlfriend “>-சினேக லதா ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று, இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை.

இப்படியெல்லாம் இருங்கள்!

உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள். இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள். நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.

உங்கள் நிறுவனம் சிறிதா பெரிதா?

– ரகு உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக வாகை சூடிய கிரிக்கெட் அணிக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் என்ன வித்தியாசம்?” இந்தக் கேள்விக்கு பதில், “எல்லாவற்றிலுமே வித்தியாசம்” என்பதாகத்தான் இருக்கும். பள்ளி அளவிலான கிரிக்கெட் அணி என்று வரும்போது, அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் அசகாய சூரர்கள் என்று சொல்ல முடியாது.

நமக்குள்ளே

நமது நம்பிக்கை பிப்ரவரி 2009 இதழில், “மனிதன் தன்னுடைய தனித்தன்மையால் ஒருவனிடமிருந்து இன்னொருவன் வித்தியாசப்பட்டு நிற்கின்றான். தனித்து நிற்பவனே பாராட்டப்படுவான்” என்னும் வரிகளில் மனிதனின் மகத்துவத்தை விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை மிக அருமை. திரு.த.சூரியதாஸ், சிலட்டூர்.