திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம்கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள் செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு

உன் பொறுப்பு

கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு- நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை- நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு!

எதுவும் கைகூடும்

இவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வளர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்றி விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது!

பாதை நீள்வது உனக்காக

மனம் உன் செயல்களைப் பார்க்கிறது- – – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது– – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம்

நல்ல நாள்

– மரபின் மைந்தன் முத்தையா காற்றில் தவழ்கிற ஒருபாடல்– – அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்தது ஒருதேடல்- – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம்- – அது