நம்பிக்கை தான் என் பலம்
நேர்காணல்: கனகலட்சுமி டாக்டர். அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல் திரு. ராமமூர்த்தி அவர்களுடனான நேர்காணல் உங்களைப் பற்றி… நாங்கள் நான்கு தலைமுறைகளாகவே பெங்களூரில் வசித்து வருகிறோம். என் தகப்பனார் பென்னி ஆலையில் வேலை பார்த்து வந்தார். என் கல்லூரி படிப்பு முடிந்ததும் அதே ஆலையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆலையிலே பணிபுரிந்தவாறே டிப்ளமோ … Continued
போட்டிகளை எதிர்கொள்ளுங்கள்
விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான் இன்னொரு தரப்பின் வெற்றி இருக்கிறது.
நமது பார்வை
சூழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராய் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பொன்னான கனவுகளுடன் அன்னா ஹசாரே மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டத் தொடங்கி விட்டார். அவருக்கு அதிக வேலை வைக்காமல் பொதுமக்களும் பொதுநல இயக்கங்களும் தாமாக முன்வந்து அன்னா ஹசாரே அருகே நிற்கிறார்கள்.
நமக்குள்ளே..
”சாட்சிகள் யாருமே இல்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்? என்று நபிகள் கேட்டார். நபியே! இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள். நம்பினோம்” இந்த வரிகள் உண்மையில் எதார்த்தத்தை யோசிக்க வைக்கிற வார்த்தைகள் அழகு, வாக்கியங்களும் அழகு, அதைச் சொன்ன விதம் அழகோ அழகு.
தோல்வி என்பதே இல்லை
வெற்றி வெளிச்சம் – இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் … Continued
வாங்க டீ சாப்பிடலாம்
காலை பத்தரை மணியிருக்கும். முன்னும் பின்னும் இருவர் முகம் நிறைய சிரிப்புடன் அழைத்துவர, பேண்ட் சட்டை போட்ட பலியாடு போல் அந்த பேக்கரிக்குள் அவர் அழைத்து வரப்பட்டார். “மூணு முட்டை பப்ஸ் மூணு டீ” என்று ஆர்டர் செய்த கையோடு, “சொல்லுங்ணா” என்று தொடங்கினார், முதலில் வந்த இளைஞர். “பழனிவேல் சொன்னாப்லீங் கண்ணா! நீங்க இன்வெஸ்ட் … Continued
நிலை உயரும்போது..
-வழக்கறிஞர் த. இராமலிங்கம் கிராமத்துக் கதைகளை எழுதுவதில் வல்லவரான பெரியவர் திரு.கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தில், கரிசல் மண்ணின் மணம் ததும்பும். அத்துடன், அவற்றில் மிக ஆழமான செய்திகளும் கிடைக்கும். கொஞ்சம் அதிகாரம் கிடைத்தாலும் மனிதன் அதை வைத்து எப்படி ஆடுகின்றான் என்பதனைச் சொல்லும் கதை இது.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சினேக லதா வெற்றிகரமான மார்க்கெட்டிங் மந்திரங்கள் இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார். ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை சந்திக்கும் ஒருவர், அந்தப் பெண்ணிடம் போய், ”நான் பெரிய பணக்காரன். என்னைத் … Continued
கைவிளக்கு
முதலடிக்கு ஏது முகூர்த்தம் இசைக்கவி ரமணன் முற்றத்தில் தவழ்ந்து முழங்கால் தேயும் குழந்தை, முதலடி எடுத்து வைக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பிஞ்சுக் கரங்கள் இரண்டும் வெட்ட வெளியில் துடுப்புத் துழவ, முழங்கால் நிமிர்வதும் குழைவதுமாய்த் தயங்க, பஞ்சுப் பாதம் பதியாமல் தள்ளாட, சின்னவிழி இரண்டும் சிறுவானாய் விரிய, அதிர்ச்சியும் எக்களிப்புமாய் அது தட்டித் தடவித் துள்ளி … Continued
நமது பார்வை
பாடங்கள் நடைபெறாத நிலையில் பள்ளிக்கூடங்கள் இயங்கிய போது, பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். பொதுஅறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தருமாறு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி சில கிராம நூலகங்களில் பிள்ளைகளைக் காண முடிந்தது. பாடத்திட்டம் இல்லாத சூழலில் பிள்ளைகளின் இயல்பான நுண்ணறிவு வெளிப்படும் விதமாக உரையாடல்களும் உறவாடல்களும் ஆசிரியர்கள்- மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்திருக்கும்.