நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்

– ருக்மணி பன்னீர்செல்வம் அடிகுழாயில் ஊற்றப்படும் நீர்போல் நம்முடைய புலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும், உள்வாங்கும் அறிவை எல்லாம் அப்படியே உள்ளிருப்பாய் வைத்திருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. (சிலர் அறிந்து கொள்வதுமில்லை, வைத்திருப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்). உள்ளே ஊற்றிய நீர் கீழிறங்கி விசையின் மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்று நீரை வெளியே … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா மைக்கேல் சௌல் டேல் சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை. எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப … Continued

உறியடி வாழ்க்கை

– மரபின் மைந்தன் ம. முத்தையா குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம்- தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு

நமக்குள்ளே…

ஜுன் 2011 இதழில் துணை ஆட்சியர் திரு.ங.எ.ராஜமாணிக்கம் அவர்களின் பேச்சு, தூங்கும் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் தன்மையுடன் வெளிவந்தது அருமை. கல்யாணப் பரிசு தொடர் நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியருக்கு நன்றி!! ஜெ.ச.நித்யா, மதுரை.

வாழ நினைத்தால் வாழலாம்

– ருத்ரன் பதில்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி? திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற … Continued

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தலைவராக தயாராகுங்கள்

– கிருஷ்ண வரதராஜன் அந்த மரத்தடி பிள்ளையார் மீது மக்களுக்கு ஏகத்திற்கு வருத்தம் இருந்தது. எந்த வேண்டுதலையும் நிறைவேற்றுவதில்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்ற கோபத்தில் இருந்தனர். ஒரு நாள் கோபம் எல்லை மீற பிள்ளையா ரோடு சண்டை போட கிளம்பி விட்டார்கள். நீ பிள்ளையார் இல்லை. வெறும் கல்தான் என்று கோபத்தோடு கல் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

வேலைக்கு ஆட்கள் தேவை. அதுவும் உடனடியாக தேவை. நிறுவனத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமே தேவை. இப்படிப்பட்ட சூழல்தான் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை என்ற விஷயத்தில் சிறிய நிறுவனம் பெரிய நிறுவனம் என்ற வித்தியாசங்களெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் இதே சூழல்தான்.

இனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்

– சாதனா நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள். ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 … Continued

முடியாதென்று நினைக்காதீர்கள்

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.

நடமாடும் விளம்பரங்கள்

– கிருஷ்ண வரதராஜன் அரசியல் தலைவர்களின் வருகையின்போது, அவர்கள் செல்லும் பாதையெல்லாம் அடைத்துக் கொண்டு நிற்கும், ‘உங்கள் உண்மைத் தொண்டன்’ வகை விளம்பரங்களை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? ‘இது தலைவருக்கான விளம்பரமா? இல்லை, வரவேற்பு தட்டிவைத்த, அந்த தொண்டனுக் கான விளம்பரமா?’