தேவைகள்தான் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன

திரு. சௌந்தரராஜன் நிறுவனர் – சுகுணா பவுல்ட்ரி சுகுணா பவுல்ட்ரி 20 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. கோழி வளர்ப்பு, கோழிகள் விற்பனை ஆகிய துறைகளில் அகில இந்திய அளவில் முத்திரை பதித்துள்ள சுகுணா பவுல்ட்ரி குழு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. … Continued

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்

திரு. ராஜேஷ்குமார் திரு. ராஜேஷ்குமார் இருபத்தைந்து ஆண்டுகளாய் எழுத்துலகில் நின்று நிலைத்திருப்பவர். ஆயிரத்துக்கும் அதிகமான நாவல்களைப் படைத்திருக்கும் சாதனையாளர். இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்பையும் அபிமானத்தையும் தன் இதய வங்கியில், நிரந்தர வைப்புத் திட்டத்தில் நிறைத்திருப்பவர்.

நம்பிக்கை மிக்க இளைஞர்களை உருவாக்குவோம்

டாக்டர் வினு அறம் இயக்குநர் – சாந்தி ஆசிரமம் டாக்டர் கேசவினு அறம், சாந்தி ஆசிரமத்தின் நலவாழ்வுத் துறை இயக்குநர், இந்தியாவில் படிக்கிற இளைஞர்கள் அதிக வருமானம் தேடி, அயல் நாடுகளுக்குப் பறக்கும் இந்தக் காலத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் தலைசிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, இந்திய கிராமங்களில் பணிபுரிகிற இமாலய … Continued

நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும்

திரு.வலம்புரி ஜான் ‘ஞானபாரதி’ வலம்புரிஜான், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்துக்கலை, பேச்சுக் கலை, போன்றவற்றில் தனக்கென்று தனிபாட்டை வகுத்திருக்கும் வித்தகர். நாடாளுமன்றத்தில் முழங்கிய நாவலர். உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்திருக்கும் இந்த வார்த்தைச் சித்தர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

எது விடியல்?

– மரபின்மைந்தன். ம. முத்தையா இருளை உருக்கி வார்த்த பின்னே எட்டுத் திசைக்கும் எதுவிடியல்? இரவின் ரகசியத் தீர்ப்புகளை எரித்துப் பிறக்கும் புதுவிடியல்!

என் அமெரிக்கப் பயணம் : பயண அனுபவங்கள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம்.

இலட்சியத்தின் சுட்டுவிரல்

– மரபின் மைந்தன் ம. முத்தையா பாய்ந்து வரும் ஜீவநதியைப் பார்க்கும்போது அதன் பாதையும் பயணமும் இன்னதென்று பொதுப்படையாக யாரும் வகுத்துவிட முடியாது. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பூமிப் பரப்பை ஈரப்படுத்தி, பயிர்களுக்கு உயிர் கொடுத்து, வேர்களை பலப்படுத்தி விரைந்து கொண்டே இருக்கிறது நதி.

மற்றுமொரு சுதந்திர நாள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ஆகஸ்ட் 15ற்கு ஆயத்தமாகிறது நாடு. கொடியேற்றங்களும் கோலாகலங்களுமாய் அமர்க்களப்படும். அறிக்கைகள், உறுதி மொழிகளுக்குப் பஞ்சமிராது. அரசாங்கம் ஒருபுறம் கொண்டாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, சராசரி இந்தியன் தொலைக்காட்சி முன்னர் பக்திப்பரவசமாய்த் தவமிருப்பான்.

என் அமெரிக்கப் பயணம்

– மரபின் மைந்தன் ம.முத்தையா நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன.

காற்று வீசுது

– மரபின் மைந்தன் ம.முத்தையா காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் – இந் நாளை இழந்து தவிக்காதே!