நம்பிக்கை பிறவிக்குணமா? பயிற்சியின் பரிசா?
– சினேகலதா மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லாம் உந்துசக்தியாய்த் திகழ்வது, வெளியிருந்து வரும் வாய்ப்புகளையும், வாழ்த்துகளையும், வார்த்தைகளையும்விட, மனிதனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகள்தான். அந்த வாய்ப்பை அடையாளம் கண்டு, “இதை நழுவ விட்டுவிடாதே” என்று மனிதனைத் தூண்டி செயல்படச் செய்வதும் அந்த உள்ளுணர்வுதான்.