நமது பார்வை
புதிய இலக்குகள்! புதிய விளக்குகள்! பற்பல துறைகளிலும் மாற்றங்களுக்கான வாய்ப்புகளுடன் புத்தாண்டு புலர்கிறது. வெளியில் உள்ள சூழல் மாறிக்கொண்டே இருப்பது போலவே, வளர்ச்சிக்குத் தக்கவாறு, மனிதர்களின் இலக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. தொடங்குகிற நேரத்தில் வகுத்த இலக்குகளுக்கும், தொடர்கிற நேரத்தில் வகுக்கிற இலக்குகளுக்கும் நடுவே நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.