வாழ்க்கை ஒரு திருவிழா

உழைத்துக் களைக்கிற எல்லோர்க்குமே பிடித்தமானது விடுமுறைதான். விடுமுறையை ஒரு திருவிழாவினைப் போல் கொண்டாடி மகிழ்கின்றவர்கள் பலர் உண்டு. சாதாரண ஒருநாள் விடுமுறையே இப்படியெனில் ஒரு திருவிழா விடுமுறைக்கு கூடுதல் சிறப்புண்டு.

வாடகைக்குப் பாடநூல்

இது ஒரு புது முயற்சி பென்சில் சீவிக் கொண்டிருந்தேன் மொர மொரவென மரங்கள் எங்கோ சரிய – கல்யாண்ஜி இயற்கைக்கு எதிராக தன்னால் நேரும் தவிர்க்கவியலாத இன்னல் குறித்து ஒரு கவிஞனின் மனப்பதிவு இந்தக் கவிதை.

வீட்டுக்குள் வெற்றி

ஒவ்வொரு நாளும் இனி கொண்டாட்டமே மிழகத்தில் சுனாமி தாக்கிய நேரம்.. அந்தமானில் இருந்த ஒருவர் திடீர் திடீர் என்று ஏற்படும் நில அதிர்வால் தன் குழந்தை பாதிக்கப் பட்டு விடக்கூடாது என எண்ணி தன் குழந்தையை டெல்லியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது.

சாதனைச் சதுரங்கம்

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி

வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!

அலைகள் உள்ள இடம் தாண்டி அமைதியான இடம் நோக்கி படகை விடுவதால் மீனவர்கள் தொழிலும் நடக்கிறது. தொல்லைகளும் தீர்கிறது. அலைகள் ஓயும்வரை கடலுக்குள் செல்வதில்லை என்று கரையிலேயே நின்றுவிட்டால், கடமையையும் செய்திருக்க முடியாது, காலத்தையும் வென்றிருக்க முடியாது.

திரு. இளங்கோவன் நேர்காணல்

உங்களது இளமைப் பருவம் பற்றி….. எனது தந்தையார் பெயர் திரு. குழந்தைசாமி. தாயார் பெயர் சுப்புலட்சுமி. நான் 07.10.1958-ல் பிறந்தேன். எனது கல்வி அரசு ஆரம்பப் பள்ளியில் துவங்கியது. வெள்ளக்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தது. அங்கு இரண்டாம் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பிறகு 1975ல் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். 180 மாணவர்களில் 172வது இடத்தை

அந்தக்காலம் இந்த மாதம்

ஜூலை 15 1985 ஆல்டஸ் நிறுவனத்தின் பேஜ்மேக்கர் என்ற மென்பொருள் இன்றுதான் உலகுக்கு அறிமுகமானது. செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் பிரசுரிப்பதற்கு ஏற்ற வகையில் கண்டறியப்பட்ட உலகின் முதல் மென்பொருள் இது!

நமது பார்வை

இது பரவுக! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வாழ்த்துத் தெரிவிக்க மட்டும் அல்ல! தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேச நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் தான்!!

அட்டைப்படக் கட்டுரை

– மரபின்மைந்தன் ம. முத்தையா கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.