இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்
– கிருஷ்ண வரதராஜன் தொடர் மேலதிக விபரங்களுக்கு: பிரபல நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்களை உற்சாகப்படுத்த ஒரு செயல் திட்டம் வகுத்துத்தருமாறு எங்கள் கன்சல்டன்ஸியிடம் கேட்டிருந்தது. அதற்கு நாங்கள் வகுத்தளித்த திட்டம்தான் இரட்டைச்சம்பளம். ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறப்பாக வேலை செய்யும் ஒருவருக்கு அவர் வாங்கும் சம்பளத்தை போல இன்னொரு மடங்கு பரிசு. அதாவது இரட்டைச்சம்பளம் வழங்கப்படும். … Continued
கலாம் 80 கொண்டாட வாங்க
அட்டைப்படக் கட்டுரை 2003 ஜுலை மாதம் காலை 8.40 மணி. தன் அலுவலக மேசையருகே அலறிய தொலைபேசியை எடுத்தார் திரு.பி.எம்.நாயர். அழைத்தவர் அவருடைய மேலதிகாரி. ”மிஸ்டர் நாயர்! நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் படுக்கையறை மழையில் ஒழுகியது.” இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார் நாயர். அவர் மனநிலையைப் புரிந்து கொண்டவர் போல், ”கவலைப் படாதீர்கள்! … Continued
முயற்சி வேண்டும்
– டாக்டர் கவிஞர் ராஜ்கவி அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல! அப்படியே உட்காரப் பாறையுமல்ல! திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ! திரிந்தலைய அதன்தேவை கோடி செல்வமா? விசைவேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா? வேலையொன்றும் செய்யாமல்
மனமே உலகின் முதல் கணினி
திரு. என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் – தொடர் புரோகிராம் 1 சூழ்நிலைகளை புறம் தள்ளி, நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நம்முடைய சொந்த தட்பவெட்பத்தை மட்டும் சுமந்து செல்வோம். புரோகிராம் 2 சமீபத்தில் இந்தியா ஐ.சி.சி உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆட்டத்தின் இறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி ரன்களை குவித்த … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்
இந்த வாரம் திலகவதி ஐ.பி.எஸ். இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) நான் முதன்முதலில் சென்னைக்கு என் இளநிலை பட்டமளிப்பு விழாவிற்காக தந்தையோடு வந்தேன். நகரின் பிரம்மாண்ட கட்டிடங்கள், புதிய நாகரீகம், அசுர வளர்ச்சி அடைந்திருந்த போக்குவரத்து என அனைத்தும் … Continued
அன்று இன்று
கலாச்சாரம், ஆன்மிகம் என பல நற்பண்புகளுக்கு பெயர் போன தமிழக மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி 1931இல் இச்சிறுவன் பிறந்தான். அவுல் பக்கீர் என பெயரிடப்பட்ட இச்சிறுவனின் தந்தை ஜைனுலாபுதீன், தன்னிடம் இருந்த சில படகுகளை அங்கிருந்த மீனவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து வந்தார். முறையாக கல்வி கற்கவில்லையே அன்றி அடர்ந்த ஞானமும், அறிவும் … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சினேகலதா buy cigars online தொடர் மாற்றங்களே வெற்றியைத் தரும் ஹார்லிக்ஸ் என்கிற ஆரோக்கிய பானம் கடந்து வந்திருக்கும் தூரம் பற்றி, கடந்த இதழில் பேசினோம். சில தயாரிப்புகள் தாமாகவே சந்தையில் கட்டமைத்துக் கொண்ட அபிப்பிராயங்களைத் தலைகீழாக மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படியோர் அக்கினிப் பரிட்சையை ஹார்லிக்ஸ் கடந்து வந்திருக்கிறது.
கைவிளக்கு
– இசைக்கவி ரமணன் பள்ளம் அழைத்தா பாய்ந்தது வெள்ளம் பாய்தல் நீரின் இயல்பு! பாதை போடும் பச்சைப்புல்லும் பழகிய உழைப்பின் சிரிப்பு! உள்ளம் உணர! உடலோ உழைக்க! உயிரோ ஒளியை ஊட்ட! ஒருநாள் உள்ளே கதவு திறக்கும் உண்மையை உண்மை காட்ட! 3. நீங்கள் யாராக அல்லது என்னவாக ஆக விரும்புகிறீர்கள்? What or who … Continued
நமது பார்வை
உலகெங்கும் 137 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிற நிலையில் அந்தப் பட்டியலில் தாமதமாகவேனும் சேரும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய வர்கள் என்ற நிலையில் சிறையிலடைக்கப்பட்டு கால வரையறையே இல்லாமல் சிறையில் கிடந்து, வாழ்வின் வசந்தங்கள் வற்றிப்போன நிலையில் தூக்கு தண்டனை என்பது தனிமனித உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது. தீர்ப்பு விதித்த நீதிபதி … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 6
எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு மனிதர் சக்தி மிக்கவராய் செல்வாக்கு மிகுந்தவராய் விளங்கினார். அவர் பழக மிக எளியவராய் அன்பானவராய் திகழ்ந்தார்.அவர் வல்லமை கண்டு வியந்தவர்கள் எல்லோரும் அவருடைய எளிமை கண்டு மயங்கினார்கள். அதுபற்றிக்