பிறந்தநாளை கொண்டாடுங்கள்
எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே இரண்டு பேரும் அவர்கள் குழுவினரோடு இமயத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
உணர்ச்சி… உணர்வு.. என்னங்க வித்தியாசம்..?
ஆசிரியர் குழுவினரின் அரட்டைக் கச்சேரி வெளியிலே கிளம்பறபோது ஒரு ஸ்ப்ரே எடுத்து விஷ்க்ன்னு அங்கே இங்கே அடிச்சுக் கறோமே! அது உணர்ச்சி. பூஜையறைக்குள்ள, பூக்களோட வாசனைக்கு போட்டியா, காற்றில் கை கோர்த்து கமகமன்னு வருது பாருங்க, ஊதுவத்தி வாசனை… அது உணர்வு. வ அலை போல வீசுகிறது உணர்ச்சி. ஆற அமர அனுபவிக்கிறது உணர்வு. ஜெயிக்கணும்னு … Continued
கல்யாணப் பரிசு
– கிருஷ்ண வரதராஜன் கணவன் மனைவி புரிதல் பற்றிய புத்துணர்ச்சித் தொடர் திருமணமான ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்துகொள்ள பத்து ஆண்டுகள் ஆகும்’ என்று, என் திருமணத்திற்கு முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் ஆன என் நண்பரிடம் இதைச்சொன்னதற்கு, ”பத்து என்று தெரியாமல் சொல்கிறீர்கள். இருபதாக இருக்கும்” … Continued
வெற்றியின் பன்முகங்கள்
– ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. K.R. நாகராஜ் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்தவராக இருப்பவர், பில் கேட்ஸ். அடுத்து நமது ஊரில் நல்ல வளர்ச்சியோடு இருப்பவர் ரிலையன்ஸ் அம்பானி. அடுத்து நல்ல கோட்பாடுகளைக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் ஒன்று அது டாடா. இன்றைக்கு இந்திய அளவில் ஆடவர்களுக்குக்கான ஆடைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்கள் … Continued
என்னைக் கண்டெடுத்தேன்
– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது. அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது” வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்..!
– மரபின்மைந்தன் ம. முத்தையா கொஞ்சம் முயன்றால் அதைச் செய்திருக்கலாம். சூழ்நிலை சரியாக இல்லை, பொறுப்பில்லாமல் எதையாவது முயற்சி செய்து சூடுபட வேண்டாமே என்று பார்த்தேன்”. சவால்களை எதிர்கொள்ளாத பலரும் சொல்லிக் கொள்கிற சமாதானம் இது. பொறுப்புடன் இருப்பதென்றால் கனவு களைத் துறப்பதல்ல. பொறுப்புடன் இருப்பதென்றால் சவால்களைத் தவிர்ப்பதல்ல. துணிந்து களத்தில் இறங்கி, முயன்று, வெற்றிகளைத் … Continued
சமுதாயப் பணியில் சங்கீதக்குயில் பத்மஸ்ரீ. சுதாரகுநாதன்
நேர்காணல் சமுதாயா பவுண்டேஷன் அறக்கட்டளை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி….? சங்கீத உலகில் நான் 30 ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் அதிக கச்சேரிகள் நிதிதிரட்டும் விதமாக செய்கிறோம். சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாகவும், கேன்சர் பவுண்டேஷன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மற்றும் பல அமைப்புகளுக்காக பாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாம் அறக்கட்டளை தொடங்கினால் என்ன … Continued
லிப்ட் தத்துவம்
– கிருஷ்ண வரதராஜன் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத எழுத்தாளர் வேலை என்னுடையது என்பதால் பெரும்பாலும் நான் லிப்ட்டை தவிர்த்து படிகளில்தான் மேலேறுவேன். எதிர்படும் யாராவது, ”வாங்க சார். லிப்ட்ல போகலாம். சீக்கிரம் மேலே போகலாம்” என்பார்கள். ”நான் சீக்கிரம் மேலே போக விரும்பாததால்தான் படியிலேயே செல்கிறேன்” என்பேன், இரட்டை அர்த்தத்தோடு.
இரண்டரை இலட்சம் மரங்கன்றுகள்
ஆக்கப்பணியில் ஈஷாவின் ஆனந்த அலை!! சில மாதங்களுக்குள்ளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டதும், ஒவ்வோர் ஊரிலும் அந்த மரங்களை வளர்க்கப் பசுமைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும் சமீபத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்கள். விரைவில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேகலதா எல்லாமே ரைட் நம்பர் நிறைய நிறுவனங்களில் டெலிபோன் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்கிற ஒன்று, ”சாரி! ராங் நம்பர்”. ஆனால் அமெரிக்காவின் மார்க்கெட்டிங் நிபுணர் ரோசென் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின்படி, ஒரு நிறுவனத்திற்கு வருகிற எந்த அழைப்புமே ராங் நம்பர் இல்லை!